• Nov 01 2025

பலமாக தாக்கப்பட்ட பின் விஷம் குடித்து உயிரிழந்த நபர்; தகாத உறவில் இருந்த பெண்ணுடன் சிக்கிய நால்வர்

Chithra / Oct 31st 2025, 12:22 pm
image


மொனராகலை,  மஹஅராவ பிரதேசத்தில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தொம்பகஹவெல பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மொனராகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் ஒக்டோபர் 25 ஆம் திகதி காயமடைந்த நிலையில் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து சந்தேகமடைந்த வைத்தியர்கள், குறித்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக  சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்து நீதிமன்ற உத்தரவின் கீழ் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதிமன்ற வைத்தியரின் தலைமையில் கடந்த 28 ஆம் திகதி பிரதேச பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். 

பிரேத பரிசோதனையில் குறித்த நபர் பலமாக தாக்கப்பட்டு பின்னர் விஷம் குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணும் அந்த பெண்ணின் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் உயிரிழந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 32 வயதுடைய பெண்ணும், அந்த பெண்ணின் 29 மற்றும் 36 வயதுடைய இரு சகோதரிகளும் 25 வயதுடைய ஒரு சகோதரனும் ஆவர். 

இந்த  சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சியம்பலாண்டுவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பலமாக தாக்கப்பட்ட பின் விஷம் குடித்து உயிரிழந்த நபர்; தகாத உறவில் இருந்த பெண்ணுடன் சிக்கிய நால்வர் மொனராகலை,  மஹஅராவ பிரதேசத்தில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தொம்பகஹவெல பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மொனராகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் ஒக்டோபர் 25 ஆம் திகதி காயமடைந்த நிலையில் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபரின் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து சந்தேகமடைந்த வைத்தியர்கள், குறித்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக  சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்து நீதிமன்ற உத்தரவின் கீழ் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதிமன்ற வைத்தியரின் தலைமையில் கடந்த 28 ஆம் திகதி பிரதேச பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் குறித்த நபர் பலமாக தாக்கப்பட்டு பின்னர் விஷம் குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணும் அந்த பெண்ணின் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் உயிரிழந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 32 வயதுடைய பெண்ணும், அந்த பெண்ணின் 29 மற்றும் 36 வயதுடைய இரு சகோதரிகளும் 25 வயதுடைய ஒரு சகோதரனும் ஆவர். இந்த  சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சியம்பலாண்டுவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement