• Nov 01 2025

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி; சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழப்பு!

shanuja / Oct 31st 2025, 12:26 pm
image

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த விபத்து கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில்   இன்று வெள்ளிக்கிழமை (31) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி; சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழப்பு ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில்   இன்று வெள்ளிக்கிழமை (31) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement