• Nov 24 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார்..? - ஆரம்பமானது இரகசிய வாக்கெடுப்பு...!

Chithra / Jan 21st 2024, 10:40 am
image

 

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய செயற்குழு இன்று திருகோணமலையில் கூடியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்ப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 330 பேர் வாக்களிக்க முடியும்

எனினும் 296 உறுப்பினர்களே வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதில் குறிப்பாக மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்திருந்தும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார். - ஆரம்பமானது இரகசிய வாக்கெடுப்பு.  இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய செயற்குழு இன்று திருகோணமலையில் கூடியுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்ப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 330 பேர் வாக்களிக்க முடியும்எனினும் 296 உறுப்பினர்களே வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,அதில் குறிப்பாக மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்திருந்தும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement