"மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம். எமது அரசின் எந்தப் பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்."
- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரச ஊடக பிரதானிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்த நாட்டு மக்கள் பல்வேறு அரசுகளைத் தெரிவு செய்தனர். பல அரசுகளைக் கவிழ்த்துள்ளனர்.
வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை நாட்டு மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களின் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்னவென்பது தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்கு உள்ளது.
தரமான மற்றும் நிலையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசைத் தேர்ந்தெடுத்தனர்.
அந்தச் சிறப்பான நம்பிக்கை கடுகளவிலும் சிதைந்து போவதற்கு எமது அரசு ஒருபோதும் இடமளிக்காது.
மிகச் சுருக்கமாகச் சொல்வதாயின், நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்தக் காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசு தயாரில்லை. நாட்டுக்குள் மட்டுமன்றி எமது அரசினுள் எந்தத் தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்வதற்கும் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை.
ஏழு தசாப்தங்களாக ஏமாற்றங்களுக்கு உள்ளான மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கவும், இந்த நாட்டை மிகச் சிறந்த நாடாக மாற்றுவதற்கும் நாம் நிபந்தனைகளின்றி எம்மை அர்ப்பணிக்கின்றோம்." - என்றார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட அரசின் ஊடகப் பிரதானிகள் இதன்போது கலந்துகொண்டனர்.
எவர் தவறிழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தே தீருவோம் - ஜனாதிபதி அநுர திட்டவட்டம் "மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம். எமது அரசின் எந்தப் பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்."- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.அரச ஊடக பிரதானிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்த நாட்டு மக்கள் பல்வேறு அரசுகளைத் தெரிவு செய்தனர். பல அரசுகளைக் கவிழ்த்துள்ளனர்.வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை நாட்டு மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களின் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்னவென்பது தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்கு உள்ளது.தரமான மற்றும் நிலையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசைத் தேர்ந்தெடுத்தனர்.அந்தச் சிறப்பான நம்பிக்கை கடுகளவிலும் சிதைந்து போவதற்கு எமது அரசு ஒருபோதும் இடமளிக்காது.மிகச் சுருக்கமாகச் சொல்வதாயின், நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்தக் காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசு தயாரில்லை. நாட்டுக்குள் மட்டுமன்றி எமது அரசினுள் எந்தத் தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்வதற்கும் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை.ஏழு தசாப்தங்களாக ஏமாற்றங்களுக்கு உள்ளான மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கவும், இந்த நாட்டை மிகச் சிறந்த நாடாக மாற்றுவதற்கும் நாம் நிபந்தனைகளின்றி எம்மை அர்ப்பணிக்கின்றோம்." - என்றார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட அரசின் ஊடகப் பிரதானிகள் இதன்போது கலந்துகொண்டனர்.