அரசாங்கங்கள் தமது முழு ஆட்சி காலத்திலும் பெறும் கடனை இந்த அரசாங்கம் ஒரே ஆண்டில் பெறவிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது உள்ளுராட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
கடன் பெற்று நாட்டை நிர்வகிப்பதற்கு ஆட்சியாளர்கள் எதற்கு என கேள்வியெழுப்பியவர்கள் இன்று, வரவு - செலவு திட்டதில் இடைவெளியை நிரப்புவதற்காக மாத்திரம் 7 பில்லியன் டொலர் கடன் பெற திட்டமிட்டுள்ளனர்.
ஏனைய அரசாங்கங்கள் தமது முழு ஆட்சி காலத்திலும் பெறும் கடனை இந்த அரசாங்கம் ஒரே ஆண்டில் பெறவிருக்கிறது.
வட் வரியைக் குறைப்பதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரம் எதற்கு? தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
இவ்வாறு உங்களை ஏமாற்றியவர்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்பித்து மக்கள் ஆணையின் பலம் என்ன என்பதை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு காண்பிக்க வேண்டும். என்றார்.
பொருட்களின் விலைகள் சேவை கட்டணங்களை குறைக்க உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரம் எதற்கு - மரிக்கார் கேள்வி அரசாங்கங்கள் தமது முழு ஆட்சி காலத்திலும் பெறும் கடனை இந்த அரசாங்கம் ஒரே ஆண்டில் பெறவிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.தற்போது உள்ளுராட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். கடன் பெற்று நாட்டை நிர்வகிப்பதற்கு ஆட்சியாளர்கள் எதற்கு என கேள்வியெழுப்பியவர்கள் இன்று, வரவு - செலவு திட்டதில் இடைவெளியை நிரப்புவதற்காக மாத்திரம் 7 பில்லியன் டொலர் கடன் பெற திட்டமிட்டுள்ளனர்.ஏனைய அரசாங்கங்கள் தமது முழு ஆட்சி காலத்திலும் பெறும் கடனை இந்த அரசாங்கம் ஒரே ஆண்டில் பெறவிருக்கிறது. வட் வரியைக் குறைப்பதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரம் எதற்கு தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.இவ்வாறு உங்களை ஏமாற்றியவர்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்பித்து மக்கள் ஆணையின் பலம் என்ன என்பதை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு காண்பிக்க வேண்டும். என்றார்.