முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டலந்த சித்திரவதை மையத்தில் ரணில் விக்ரமசிங்கவின் சித்திரவதைகளில் ஈடுபட்டதை தான் நேரில் கண்டதாக தனது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.
முன்னதாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு இளைஞர் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், ரணிலை ஏன் கைது செய்ய முடியாது என்று துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஏன் அதுவரை கைது செய்யப்படவில்லை கேள்வி எழுப்பும் கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.பட்டலந்த சித்திரவதை மையத்தில் ரணில் விக்ரமசிங்கவின் சித்திரவதைகளில் ஈடுபட்டதை தான் நேரில் கண்டதாக தனது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.முன்னதாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு இளைஞர் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில், முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், ரணிலை ஏன் கைது செய்ய முடியாது என்று துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.