• Nov 25 2024

தேர்தலை ஒத்திவைக்குமாறு விக்னேஸ்வரன் எம்.பி கூறுவது மடத்தனமானது...! பிரபா கணேசன் சுட்டிக்காட்டு...!

Sharmi / Jul 5th 2024, 3:55 pm
image

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலை ஒருவருடம் ஒத்திவைக்குமாறு கூறுவது ஒரு மடத்தனமான கருத்து என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு விக்னேஸ்வரன் கூறுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் ஒரு விடயமாகதான் அவரது கூற்று இருக்கின்றது.

நாட்டிலுள்ள மக்கள் தற்போது தேர்தலை எதிர்பார்த்துகொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ, அநுரவோ வெற்றி பெற்றாலும் கூட ஜனநாயக ரீதியாக இந்த நாட்டை பொறுப்பேற்று 05 வருடங்களுக்கு நாட்டை ஸ்திரத்தன்மையுடன் ஆளவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் விக்னேஸ்வரனின் இந்த கருத்து வேடிக்கையானது.

ஆகவே, அவர் கூறிய கருத்தை நிச்சயமாக வாபஸ் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.








தேர்தலை ஒத்திவைக்குமாறு விக்னேஸ்வரன் எம்.பி கூறுவது மடத்தனமானது. பிரபா கணேசன் சுட்டிக்காட்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலை ஒருவருடம் ஒத்திவைக்குமாறு கூறுவது ஒரு மடத்தனமான கருத்து என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு விக்னேஸ்வரன் கூறுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் ஒரு விடயமாகதான் அவரது கூற்று இருக்கின்றது.நாட்டிலுள்ள மக்கள் தற்போது தேர்தலை எதிர்பார்த்துகொண்டிருக்கின்றார்கள்.தேர்தல் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ, அநுரவோ வெற்றி பெற்றாலும் கூட ஜனநாயக ரீதியாக இந்த நாட்டை பொறுப்பேற்று 05 வருடங்களுக்கு நாட்டை ஸ்திரத்தன்மையுடன் ஆளவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் விக்னேஸ்வரனின் இந்த கருத்து வேடிக்கையானது.ஆகவே, அவர் கூறிய கருத்தை நிச்சயமாக வாபஸ் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement