சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கல்லாறு மற்றும் சமகிபுர பகுதிகளில் நேற்று இரவு யானைகள் திடீரென கிராமங்களில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களை அழித்ததோடு, அறுவடை இயந்திரத்தையும் சேதப்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
இதனால், அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், கடந்த அரசாங்க காலத்தில் அமைக்கப்பட்ட யானை வேலிகள் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளதால், யானைகள் எளிதாக கிராமங்களுக்குள் நுழைவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கிராம மக்கள் இரவெல்லாம் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்காக, யானை வேலிகளை புதுப்பித்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் – விவசாயிகள் பாதிப்பு சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கல்லாறு மற்றும் சமகிபுர பகுதிகளில் நேற்று இரவு யானைகள் திடீரென கிராமங்களில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களை அழித்ததோடு, அறுவடை இயந்திரத்தையும் சேதப்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.மேலும், கடந்த அரசாங்க காலத்தில் அமைக்கப்பட்ட யானை வேலிகள் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளதால், யானைகள் எளிதாக கிராமங்களுக்குள் நுழைவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கிராம மக்கள் இரவெல்லாம் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்காக, யானை வேலிகளை புதுப்பித்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.