• Apr 07 2025

ஈச்சநகர் காட்டுப்பகுதியில் T-56 துப்பாக்கி மீட்பு!

Chithra / Apr 7th 2025, 7:50 am
image

திருகோணமலை - தம்பலகாமம் - முள்ளிப்பத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் காட்டுப்பகுதியில் T-56 வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கை நேற்று இரவு கந்தளாய் சூரியபுர விசேட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

தற்போது, இந்த துப்பாக்கி எவ்வாறு இப்பகுதிக்கு வந்தது, யார் வைத்திருந்தனர் என்பது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈச்சநகர் காட்டுப்பகுதியில் T-56 துப்பாக்கி மீட்பு திருகோணமலை - தம்பலகாமம் - முள்ளிப்பத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் காட்டுப்பகுதியில் T-56 வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நடவடிக்கை நேற்று இரவு கந்தளாய் சூரியபுர விசேட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.தற்போது, இந்த துப்பாக்கி எவ்வாறு இப்பகுதிக்கு வந்தது, யார் வைத்திருந்தனர் என்பது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement