• Jan 19 2025

மட்டக்களப்பில் பாடசாலைகளின் சுற்று வேலிகளை நாசம் செய்த காட்டு யானைகள்

Chithra / Jan 6th 2025, 1:09 pm
image

 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றினுள் காட்டுயானைகள் புகந்து அங்குள்ள சுற்று வேலிகளை நாசம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேசத்தில் மிக நீண்ட காலத்திலிருந்தே  இவ்வாறு காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாக அக்கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.  

இதனால் அப்பகுதியிலுள்ள, வெல்லாவெளி, வேத்துசேனை, காக்காச்சிவட்டை, விவேகானந்தபுரம், தும்பங்கேணி, திக்கோடை, களுமுந்தன்வெளி, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காட்டுயானைகளால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டினை அண்மித்த சூழலில் சுமார் 30 இற்கு மேற்பட்ட காட்டுயானைகள் அலைந்து திரிவதால்  இரவு வேளைகளில் யானைகள் கிராமங்களுக்குள் உட்புகுந்து வீடுகளையும், பாடசாலைகளும், பயிரினங்களையும் நாசம் செய்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானை வெடிகளை வைத்து யானைகளை விட்டினாலும் காட்டுயானைகளின் அட்டகாசம் குறையாதுள்ளதால் காட்டு யானைகளை உடனடியாக தமது பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மட்டக்களப்பில் பாடசாலைகளின் சுற்று வேலிகளை நாசம் செய்த காட்டு யானைகள்  மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றினுள் காட்டுயானைகள் புகந்து அங்குள்ள சுற்று வேலிகளை நாசம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேசத்தில் மிக நீண்ட காலத்திலிருந்தே  இவ்வாறு காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாக அக்கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.  இதனால் அப்பகுதியிலுள்ள, வெல்லாவெளி, வேத்துசேனை, காக்காச்சிவட்டை, விவேகானந்தபுரம், தும்பங்கேணி, திக்கோடை, களுமுந்தன்வெளி, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காட்டுயானைகளால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டினை அண்மித்த சூழலில் சுமார் 30 இற்கு மேற்பட்ட காட்டுயானைகள் அலைந்து திரிவதால்  இரவு வேளைகளில் யானைகள் கிராமங்களுக்குள் உட்புகுந்து வீடுகளையும், பாடசாலைகளும், பயிரினங்களையும் நாசம் செய்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.யானை வெடிகளை வைத்து யானைகளை விட்டினாலும் காட்டுயானைகளின் அட்டகாசம் குறையாதுள்ளதால் காட்டு யானைகளை உடனடியாக தமது பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement