• Nov 24 2024

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைகள்..!

Sharmi / Aug 22nd 2024, 12:38 pm
image

புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட வண்ணாத்திவில்லு மற்றும் ஆனமடுவ பிரதேச செயலக பிரிவுகளில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

அந்த வகையில் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழைய எழுவாங்குளம் உப்பாற்றுப் பகுதில் சுமார் 25 மதிக்கத்தக்க காட்டு யானையொன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.

அதேவேளை,  ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட வெம்புவெவ பகுதியில் 30 வது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

குறித்த காட்டு யானைகளுக்கு கால்நடை வைத்தியர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலே உயிரிழந்தமைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.



புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைகள். புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட வண்ணாத்திவில்லு மற்றும் ஆனமடுவ பிரதேச செயலக பிரிவுகளில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.அந்த வகையில் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழைய எழுவாங்குளம் உப்பாற்றுப் பகுதில் சுமார் 25 மதிக்கத்தக்க காட்டு யானையொன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.அதேவேளை,  ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட வெம்புவெவ பகுதியில் 30 வது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளது என தெரிய வந்துள்ளது.குறித்த காட்டு யானைகளுக்கு கால்நடை வைத்தியர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலே உயிரிழந்தமைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement