• Feb 08 2025

பாடசாலை பாடத்திட்டத்திலிருந்து அழகியல், உடற்கல்வி பாடங்கள் நீக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு

Chithra / Feb 8th 2025, 5:50 pm
image


புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள்குறித்து கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைக் குழுவின் பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

இதன் போது கல்வி முறையில் உள்ள பலவீனங்களைச் சமாளித்து, புதிய கல்விச் சீர்திருத்தங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும், அதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. 

பாடத்திட்டத் திருத்தம், பாட உள்ளடக்கம், கல்வி, பாடசாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, அணுகுமுறை, கல்வித் துறையில் தொழில்முறை விருத்தி, மதிப்பீட்டு முறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. 

மேலும், பாலர் பாடசாலைக் கல்வி விருத்தி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்புவரை, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை, 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்புவரை கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

"கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


பாடசாலை பாடத்திட்டத்திலிருந்து அழகியல், உடற்கல்வி பாடங்கள் நீக்கப்படுமா பிரதமரின் அறிவிப்பு புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள்குறித்து கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைக் குழுவின் பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன் போது கல்வி முறையில் உள்ள பலவீனங்களைச் சமாளித்து, புதிய கல்விச் சீர்திருத்தங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும், அதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத் திருத்தம், பாட உள்ளடக்கம், கல்வி, பாடசாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, அணுகுமுறை, கல்வித் துறையில் தொழில்முறை விருத்தி, மதிப்பீட்டு முறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், பாலர் பாடசாலைக் கல்வி விருத்தி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மேலும், 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்புவரை, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை, 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்புவரை கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். "கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement