• Oct 18 2024

13ஆவது திருத்தம் அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்குமா – விளக்கிய நிலாந்தன்! SamugamMedia

Tamil nila / Feb 15th 2023, 5:45 pm
image

Advertisement

தென்னிலங்கையில் நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னரும் கூட அங்கே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் சிந்தனைகளில் அதிகம் மாற்றம் நிகழவில்லை என்பது கண்கூடாக தெரிவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருந்த நிலையில் பிரதியை ஒன்றையும் நெருப்பில் பிக்குகள் கொழுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே

இந்நிலையில் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பது, 13 மைனஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்றும் நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.


குறிப்பாக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு ராஜதந்திரச் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை இலங்கை தற்போது இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான உறவைச் சுமூகமாக்க வேண்டியிருக்கிறது.


எனவே இந்தியா, இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும் என குறிப்பிட்டுள்ள நிலாந்தன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ். கலாச்சார மையத்தைக் கையளிக்கும் நிகழ்வைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா அவ்வாறு கொழும்பின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை உண்டா?  என்ற கேள்வி வலிமையாக மேலெழுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஆவது திருத்தம் அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்குமா – விளக்கிய நிலாந்தன் SamugamMedia தென்னிலங்கையில் நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னரும் கூட அங்கே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் சிந்தனைகளில் அதிகம் மாற்றம் நிகழவில்லை என்பது கண்கூடாக தெரிவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருந்த நிலையில் பிரதியை ஒன்றையும் நெருப்பில் பிக்குகள் கொழுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததேஇந்நிலையில் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பது, 13 மைனஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா என்றும் நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.குறிப்பாக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு ராஜதந்திரச் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை இலங்கை தற்போது இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான உறவைச் சுமூகமாக்க வேண்டியிருக்கிறது.எனவே இந்தியா, இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும் என குறிப்பிட்டுள்ள நிலாந்தன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ். கலாச்சார மையத்தைக் கையளிக்கும் நிகழ்வைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா அவ்வாறு கொழும்பின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை உண்டா  என்ற கேள்வி வலிமையாக மேலெழுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement