• May 17 2024

வங்காளதேசத்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

Tamil nila / Dec 21st 2022, 9:07 pm
image

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இந்தியா-வங்காளதேசம் மோதும் இரணடாவது  மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நாளைய தினம்  ஆரம்பமாகவுள்ளது. குறித்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கின்றது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் வெற்றியுடன் தொடரை முடிக்க இந்திய வீரர்கள் விரும்புகிறார்கள்.


குறித்த  டெஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . முதல் டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார். 


இரு அணிகளும் மோதிய 12 டெஸ்டில் இந்தியா 10 போட்டிகளில்  வெற்றி பெற்றது. நாளைய தினம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இரண்டவாது போட்டி அரம்பவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்காளதேசத்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா-வங்காளதேசம் மோதும் இரணடாவது  மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நாளைய தினம்  ஆரம்பமாகவுள்ளது. குறித்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கின்றது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் வெற்றியுடன் தொடரை முடிக்க இந்திய வீரர்கள் விரும்புகிறார்கள்.குறித்த  டெஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . முதல் டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார். இரு அணிகளும் மோதிய 12 டெஸ்டில் இந்தியா 10 போட்டிகளில்  வெற்றி பெற்றது. நாளைய தினம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இரண்டவாது போட்டி அரம்பவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement