• Nov 26 2024

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா? - வெளியான அறிவிப்பு..!

Sharmi / Sep 24th 2024, 11:20 am
image

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர, அந்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுமா? இல்லையா? இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வினாத்தாள் தயாரிக்கும் குழுவின் உறுப்பினராக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா - வெளியான அறிவிப்பு. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர, அந்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுமா இல்லையா இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் வினாத்தாள் தயாரிக்கும் குழுவின் உறுப்பினராக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement