• May 12 2024

அரிசியின் விலை குறையுமா? வெளியான விசேட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 9:24 am
image

Advertisement

அரிசிக்கு சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளித்ததன் மூலம் விவசாயிகளுக்கு பலன் அளிக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரிசியின் விலை குறைக்கப்பட மாட்டாது என்றும், அதே விலையை விவசாயிக்கு கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் என்றும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் மித்ரபால லங்கேஷ்வா தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அரிசி கொள்முதல், அரிசி உற்பத்தி, விற்பனை ஆகிய மூன்று நிலைகளிலும் முன்னர் விதிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு வரி கணக்கிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து அரிசிக்கு விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, உரிய திருத்தத்தின் பின்னர் சந்தையில் அரிசியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


அரிசியின் விலை குறையுமா வெளியான விசேட அறிவிப்பு SamugamMedia அரிசிக்கு சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளித்ததன் மூலம் விவசாயிகளுக்கு பலன் அளிக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.அரிசியின் விலை குறைக்கப்பட மாட்டாது என்றும், அதே விலையை விவசாயிக்கு கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் என்றும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் மித்ரபால லங்கேஷ்வா தெரிவித்தார்.மேலும் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.அரிசி கொள்முதல், அரிசி உற்பத்தி, விற்பனை ஆகிய மூன்று நிலைகளிலும் முன்னர் விதிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு வரி கணக்கிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து அரிசிக்கு விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.அதன்படி, உரிய திருத்தத்தின் பின்னர் சந்தையில் அரிசியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement