• May 21 2024

3 வருடங்களின் பின் இலங்கைக்கு களமிறங்கிய முக்கிய சுற்றுலா பயணிகள் குழு! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 9:18 am
image

Advertisement

உலக நாடுகள் மத்தியில் கொவிட் பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த காலப் பகுதிக்கு பின்னர், முதல் தடவையாக சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக, இவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, 117 பேரை கொண்ட குழுவொன்றே இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.


இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தார்.

சீன சுற்றுலா பயணிகள் குழுவொன்று 3 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஏப்ரல் 4ம் திகதி முதல் வாரத்திற்கு 9 விமான சேவைகள், சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கன் ஏயார் லையின்ஸ் மற்றும் சைனா ஈஸ்டன் விமான சேவை ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்த விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.


சீனா சுற்றுலா பயணிகளின் வருகையின் ஊடாக, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2023ம் ஆண்டின் கடந்த இரு மாத காலப் பகுதியில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் 162 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

3 வருடங்களின் பின் இலங்கைக்கு களமிறங்கிய முக்கிய சுற்றுலா பயணிகள் குழு SamugamMedia உலக நாடுகள் மத்தியில் கொவிட் பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த காலப் பகுதிக்கு பின்னர், முதல் தடவையாக சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக, இவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.இதன்படி, 117 பேரை கொண்ட குழுவொன்றே இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தார்.சீன சுற்றுலா பயணிகள் குழுவொன்று 3 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.ஏப்ரல் 4ம் திகதி முதல் வாரத்திற்கு 9 விமான சேவைகள், சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.ஸ்ரீலங்கன் ஏயார் லையின்ஸ் மற்றும் சைனா ஈஸ்டன் விமான சேவை ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்த விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.சீனா சுற்றுலா பயணிகளின் வருகையின் ஊடாக, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.2023ம் ஆண்டின் கடந்த இரு மாத காலப் பகுதியில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் 162 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement