• Nov 21 2024

நாடாளுமன்ற தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படுமா? முக்கிய தீர்மானம் இன்று..!

Sharmi / Nov 4th 2024, 10:05 am
image

நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.

அந்தவகையில், பொதுத்தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என சிவில் அமைப்பு ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் அண்மையில் தாக்கல் செய்துள்ளது.

அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம்,  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படுமா முக்கிய தீர்மானம் இன்று. நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.அந்தவகையில், பொதுத்தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என சிவில் அமைப்பு ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் அண்மையில் தாக்கல் செய்துள்ளது.அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளது.இதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.பாராளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம்,  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement