நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார்.
புதிய விநியோகஸ்தரின் கீழான முதலாவது எரிவாயு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் எரிவாயு விநியோகம் செய்து வந்த ஓமான் நிறுவனத்திற்குப் பதிலாக சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் ட்ரேடிங் எஸ்.ஏ நிறுவனத்திற்குப் புதிய விநியோக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கான உரிய ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன.
முதலாவது எரிவாயு கப்பல் ஜனவரி 5 ஆம் திகதி நாட்டை வந்தடையும். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறுவது போல் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் சபையில் உறுதியளித்தார்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமா சபையில் அமைச்சர் வெளியிட்ட தகவல் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். புதிய விநியோகஸ்தரின் கீழான முதலாவது எரிவாயு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு முன்னர் எரிவாயு விநியோகம் செய்து வந்த ஓமான் நிறுவனத்திற்குப் பதிலாக சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் ட்ரேடிங் எஸ்.ஏ நிறுவனத்திற்குப் புதிய விநியோக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கான உரிய ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன. முதலாவது எரிவாயு கப்பல் ஜனவரி 5 ஆம் திகதி நாட்டை வந்தடையும். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறுவது போல் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் சபையில் உறுதியளித்தார்.