• Sep 12 2025

உதய கம்மன்பில கைது செய்யப்படுவாரா? இல்லையா? சி.ஐ.டியின் அறிவிப்பு

Chithra / Sep 12th 2025, 1:35 pm
image


முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் தன்னைக் கைது செய்ய CID தயாராகி வருவதாகக் கூறி, தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் முன்னிலையான பதில் துசொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, மனுதாரரை கைது செய்வது குறித்து CID இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அதன்படி, மனுவை பரிசீலிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

உதய கம்மன்பில கைது செய்யப்படுவாரா இல்லையா சி.ஐ.டியின் அறிவிப்பு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் தன்னைக் கைது செய்ய CID தயாராகி வருவதாகக் கூறி, தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் முன்னிலையான பதில் துசொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, மனுதாரரை கைது செய்வது குறித்து CID இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.அதன்படி, மனுவை பரிசீலிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement

Advertisement

Advertisement