• Feb 05 2025

சமூக வலைத்தளங்களில் அவதூறு; வவுனியாவில் பெண் கைது..!

Sharmi / Nov 20th 2024, 9:52 pm
image

சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வெளிநாடொன்றில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் நாட்டிற்கு வந்துள்ளார். 

இந்நிலையில், வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவருடன் இருந்த முரண்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் காணொளிகளை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த நபர் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்ட பெண் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு; வவுனியாவில் பெண் கைது. சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வெளிநாடொன்றில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் நாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவருடன் இருந்த முரண்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் காணொளிகளை பதிவிட்டுள்ளார்.இது தொடர்பாக குறித்த நபர் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.இதனையடுத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்ட பெண் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement