• Dec 14 2024

சமந்த வித்யாரத்ன பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பணியை பொறுப்பேற்பு..!

Sharmi / Nov 20th 2024, 9:33 pm
image

பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று(20)  மாலை தனது அமைச்சின் பொறுப்பை ஏற்றார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தியின் முன்னிலையிலேயே அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டுக்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் அமைச்சகம் இதுவாகும். ஆகவே  மக்களின் நம்பிக்கையைப் பேணுகிறது.

 எமது அமைச்சின் கீழ் தேயிலை, தேங்காய், இறப்பர் மற்றும் சீரக, மிளகு போன்ற இறக்குமதி பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

அவற்றின் பொருளாதார நன்மைகளை நிச்சயம் நாட்டிற்கு பெற்றுக் கொடுப்போம் அத்துடன் மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவோம் என்றார்.





சமந்த வித்யாரத்ன பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பணியை பொறுப்பேற்பு. பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று(20)  மாலை தனது அமைச்சின் பொறுப்பை ஏற்றார்.பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தியின் முன்னிலையிலேயே அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,நாட்டுக்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் அமைச்சகம் இதுவாகும். ஆகவே  மக்களின் நம்பிக்கையைப் பேணுகிறது. எமது அமைச்சின் கீழ் தேயிலை, தேங்காய், இறப்பர் மற்றும் சீரக, மிளகு போன்ற இறக்குமதி பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அவற்றின் பொருளாதார நன்மைகளை நிச்சயம் நாட்டிற்கு பெற்றுக் கொடுப்போம் அத்துடன் மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement