• Nov 14 2024

தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் உயிரிழப்பு- யாழில் சோகம்!

Tamil nila / Aug 28th 2024, 10:12 pm
image

யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி நடராசா  என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டது.

பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் உயிரிழப்பு- யாழில் சோகம் யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி நடராசா  என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டது.பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement