• Feb 08 2025

பேத்தியை காப்பாற்ற முயன்று மூதாட்டி உயிரிழந்த சோகம்..!

Chithra / May 5th 2024, 4:04 pm
image

 

காலி - பெந்தோட்டை பகுதியில் முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற மூதாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரொபோல்கொட பகுதியில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற பேத்தியை அழைத்துவரும் போதே இந்த துயர  சம்பவம்   இடம்பெற்றுள்ளது. 

பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த மூதாட்டியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பேத்தியை காப்பாற்ற முயன்று மூதாட்டி உயிரிழந்த சோகம்.  காலி - பெந்தோட்டை பகுதியில் முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற மூதாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரொபோல்கொட பகுதியில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற பேத்தியை அழைத்துவரும் போதே இந்த துயர  சம்பவம்   இடம்பெற்றுள்ளது. பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த மூதாட்டியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement