இந்தியா - கொல்கத்தாவில் பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பல நகரங்களில் வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் உள்ள அரச வைத்தியசாலையொன்றில், 2ஆம் ஆண்டு முதுநிலை வைத்தியம் பயின்று வந்த 31 வயதுடைய இளம் பெண் வைத்தியர் ஒருவர் அதே வைத்தியசாலையின் 3ஆவது மாடியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 9ஆம் திகதி இரவு நேரக் கடமையிலிருந்தபோது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், பெண் பயிற்சி வைத்தியரின் கொலை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தலைநகர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா வைத்தியசாலை வைத்தியர்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்முறைக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதேவேளை ஜார்க்கண்ட் மாநிலம் இராஞ்சியிலும் பெண் பயிற்சி வைத்தியரின் கொலையைக் கண்டித்து இராஜேந்திரா வைத்திய அறிவியல் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா - கொல்கத்தாவில் பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை இந்தியா - கொல்கத்தாவில் பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பல நகரங்களில் வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள அரச வைத்தியசாலையொன்றில், 2ஆம் ஆண்டு முதுநிலை வைத்தியம் பயின்று வந்த 31 வயதுடைய இளம் பெண் வைத்தியர் ஒருவர் அதே வைத்தியசாலையின் 3ஆவது மாடியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கடந்த 9ஆம் திகதி இரவு நேரக் கடமையிலிருந்தபோது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், பெண் பயிற்சி வைத்தியரின் கொலை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா வைத்தியசாலை வைத்தியர்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்முறைக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேவேளை ஜார்க்கண்ட் மாநிலம் இராஞ்சியிலும் பெண் பயிற்சி வைத்தியரின் கொலையைக் கண்டித்து இராஜேந்திரா வைத்திய அறிவியல் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.