குவைட்டிலிருந்து ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
தம்புள்ளை - ஹம்பஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைட்டில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தற்போது கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குவைட்டிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கை வந்த பெண்; மூன்று மாதங்களில் நடந்தது என்ன. குவைட்டிலிருந்து ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.தம்புள்ளை - ஹம்பஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைட்டில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.இந்நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தற்போது கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.