ஆனமடுவ பகுதியிலிதுந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ பகுதியிலிதுந்து புத்தளம் நோக்கிச் சென்ற வானுடன் புத்தளத்திலிருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் இடையில் உயிரிழந்துள்ளார்.
இதன் போது மூன்று பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் ஆனமடு வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- பெண் உயிரிழப்பு. ஆனமடுவ பகுதியிலிதுந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.ஆனமடுவ பகுதியிலிதுந்து புத்தளம் நோக்கிச் சென்ற வானுடன் புத்தளத்திலிருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன் போது விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் இடையில் உயிரிழந்துள்ளார். இதன் போது மூன்று பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த விபத்தில் ஆனமடு வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.