• Nov 23 2024

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு முன் கத்திகூச்சலிட்ட பெண்ணால் பதற்றம் - வலைவீசும் பொலிஸார்..!

Chithra / Oct 4th 2024, 1:17 pm
image


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் காரொன்றில் வந்திறங்கிய பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்காக தீவிர விசாரணைகளை கொழும்பு - கறுவாத்தோட்டப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்படி சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளதாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பெண் வந்திறங்கிய வெள்ளைநிற காரின் இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தோடு குறித்த பெண் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறிசேனவை குறிப்பிட்டே கடும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் வந்திறங்கிய காரின் இலக்கத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு முன் கத்திகூச்சலிட்ட பெண்ணால் பதற்றம் - வலைவீசும் பொலிஸார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் காரொன்றில் வந்திறங்கிய பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.இந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்காக தீவிர விசாரணைகளை கொழும்பு - கறுவாத்தோட்டப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்படி சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளதாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.மேற்படி பெண் வந்திறங்கிய வெள்ளைநிற காரின் இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பெண் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறிசேனவை குறிப்பிட்டே கடும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பெண் வந்திறங்கிய காரின் இலக்கத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement