காதலனை சந்திப்பதற்கு 600 கிலோ மீற்றர் பயணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் பார்மர் நகரில் வசித்து வரும் மனா ராம் என்ற பாடசாலை ஆசிரியருடன் கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனா ராமிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனா ராம் தனது முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி முகேஷ் குமாரி தனது ஆல்டோ காரில் சுமார் 600 கிலோ மீற்றர் பயணம் செய்து மனா ராமின் கிராமத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் அவரது உறவை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் காதலன் மனா ராம் கடும் கோபம் அடைந்துள்ளார். அத்துடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் திருமணம் குறித்து பிறகு பேசலாம் என முகேஷிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் இருவரும் தனியாக இருந்த வேளையில் இரும்புத் தடியால் முகேஷ் குமாரியைத் தாக்கி மனா ராம் கொலை செய்துள்ளார்.
மேலும் அவரை காரில் அமர வைத்து விபத்து போல உருவாக்க காரை வீதியில் இருந்து உருட்டி விட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , முகேஷ் இறந்த போது இருவரின் தொலைபேசிகள் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடித்து மனா ராமிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையின் இறுதியில் மனா ராம் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனைக் காண 600 மீ. கடந்து சென்ற பெண்; இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த காதலன் காதலனை சந்திப்பதற்கு 600 கிலோ மீற்றர் பயணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் பார்மர் நகரில் வசித்து வரும் மனா ராம் என்ற பாடசாலை ஆசிரியருடன் கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனா ராமிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனா ராம் தனது முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி முகேஷ் குமாரி தனது ஆல்டோ காரில் சுமார் 600 கிலோ மீற்றர் பயணம் செய்து மனா ராமின் கிராமத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் அவரது உறவை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் காதலன் மனா ராம் கடும் கோபம் அடைந்துள்ளார். அத்துடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் திருமணம் குறித்து பிறகு பேசலாம் என முகேஷிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இருவரும் தனியாக இருந்த வேளையில் இரும்புத் தடியால் முகேஷ் குமாரியைத் தாக்கி மனா ராம் கொலை செய்துள்ளார். மேலும் அவரை காரில் அமர வைத்து விபத்து போல உருவாக்க காரை வீதியில் இருந்து உருட்டி விட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , முகேஷ் இறந்த போது இருவரின் தொலைபேசிகள் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடித்து மனா ராமிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் இறுதியில் மனா ராம் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு கைது செய்யப்பட்டுள்ளார்.