• Nov 26 2024

மகளிர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டி - முதல் தடவையாக சாம்பியனானது இலங்கை

Tharun / Jul 28th 2024, 6:55 pm
image

9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது 

இந்திய அணிக்கு எதிராக  இன்று(20)  இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி  ஆசியக் கிண்ணத்தை  முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா  அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கவிஷா டில்ஹாரி 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம  ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சமாரி அத்தபத்து  61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தர்.

மகளிர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டி - முதல் தடவையாக சாம்பியனானது இலங்கை 9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது இந்திய அணிக்கு எதிராக  இன்று(20)  இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி  ஆசியக் கிண்ணத்தை  முதல் முறையாக வென்றுள்ளது.ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா  அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கவிஷா டில்ஹாரி 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம  ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சமாரி அத்தபத்து  61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தர்.

Advertisement

Advertisement

Advertisement