• Dec 24 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்யும் பணி ஆரம்பம்!

Tamil nila / Dec 21st 2024, 1:05 pm
image

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள்,.விவசாய பயிர்நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக வீதிகள் பகுதியளவிலும் முற்றாகவும் பாதிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போர் தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு போரதீவு பிரதான வீதியானது வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை  வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்தது.


இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம் அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காபெட் வீதிகளை உடைத்து அருகில் காணப்படும் வயல் நிலங்களுக்கு படை படையாக தூக்கி வீசப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியை வெகு விரைவில் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.


இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியினால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் செல்வதானால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்யும் பணி ஆரம்பம் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள்,.விவசாய பயிர்நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டிருந்தன.குறிப்பாக வீதிகள் பகுதியளவிலும் முற்றாகவும் பாதிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போர் தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு போரதீவு பிரதான வீதியானது வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை  வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்தது.இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம் அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.காபெட் வீதிகளை உடைத்து அருகில் காணப்படும் வயல் நிலங்களுக்கு படை படையாக தூக்கி வீசப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியை வெகு விரைவில் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியினால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் செல்வதானால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement