பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, ஒருநாள் செயலமர்வு ஒன்று, இன்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வினை தேர்தல் ஆணைக்குழுவும் அரசாங்கத் தகவல் துணைக் களமும் ஏற்பாடு செய்திருந்தது.
தேர்தல் சட்டங்கள், ஊடகத் தரங்கள், மற்றும் தேர்தல் ஒழுங்கு முறைகள் குறித்து உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு கற்பிப்பதே இந்த செயலமர்வின் முதன்மையான நோக்கமாகும்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில், ஊடகங்களின் பங்கு, தேர்தல் அறிக்கைகளில் ஏற்படக்கூடிய சவால்களை
இனங்கண்டு, அவற்றைக் கையாள்வதற்கான தீர்வுகளை முன்வைத்தல் மற்றும் தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து இந்த செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
தேர்தல் சட்டங்கள் ஒழுங்கு முறைகள் குறித்து திருமலையில் செயலமர்வு. பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, ஒருநாள் செயலமர்வு ஒன்று, இன்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்த செயலமர்வினை தேர்தல் ஆணைக்குழுவும் அரசாங்கத் தகவல் துணைக் களமும் ஏற்பாடு செய்திருந்தது.தேர்தல் சட்டங்கள், ஊடகத் தரங்கள், மற்றும் தேர்தல் ஒழுங்கு முறைகள் குறித்து உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு கற்பிப்பதே இந்த செயலமர்வின் முதன்மையான நோக்கமாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில், ஊடகங்களின் பங்கு, தேர்தல் அறிக்கைகளில் ஏற்படக்கூடிய சவால்களை இனங்கண்டு, அவற்றைக் கையாள்வதற்கான தீர்வுகளை முன்வைத்தல் மற்றும் தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து இந்த செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.