• Nov 22 2024

பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மரணம்..!

Chithra / Jun 6th 2024, 2:20 pm
image

 

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும்.

59 வயதான அந்த நபருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மரணம்.  மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும்.59 வயதான அந்த நபருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை.இதனைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement