• May 12 2024

கடவுள் நடனத்தின் போது உயிரைப் பிரித்த எமன்!! மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞன் - சோகச் சம்பவம் samugammedia

Chithra / Mar 31st 2023, 9:26 am
image

Advertisement

கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் யக்ஷாகாணா எனப்படும் தெய்வீககலைநிகழ்ச்சி நடப்பது வழக்கம். 

அதுபோன்று ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வில் தெய்வ வேடம் அணிந்து நடித்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தட்சினகன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா எடமங்கலா அருகே இட்யகா கிராமத்தைச் சேர்ந்தவர் காந்து அஜிலாமூலங்கிரி. இவர் அந்த பகுதிகளில் தெய்வீக கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் சில உத்தரவுகளை சொல்வார். 

மேலும் அவர் பக்தர்களுக்கு ஆசியும் வழங்குவார். அது போன்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.


உடனடியாக அங்கு உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே மாரடைப்பால் காலமாகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தெய்வீக கலை நிகழ்ச்சியின் போது அந்த தெய்வீக கலை நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவரே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடவுள் நடனத்தின் போது உயிரைப் பிரித்த எமன் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞன் - சோகச் சம்பவம் samugammedia கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் யக்ஷாகாணா எனப்படும் தெய்வீககலைநிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வில் தெய்வ வேடம் அணிந்து நடித்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தட்சினகன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா எடமங்கலா அருகே இட்யகா கிராமத்தைச் சேர்ந்தவர் காந்து அஜிலாமூலங்கிரி. இவர் அந்த பகுதிகளில் தெய்வீக கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் சில உத்தரவுகளை சொல்வார். மேலும் அவர் பக்தர்களுக்கு ஆசியும் வழங்குவார். அது போன்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.உடனடியாக அங்கு உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே மாரடைப்பால் காலமாகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தெய்வீக கலை நிகழ்ச்சியின் போது அந்த தெய்வீக கலை நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவரே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement