• May 17 2024

ரொனால்டோவை தொடக்கூட முடியாது! மெஸ்ஸியின் கோபத்தை தூண்டிய கைலியன் எம்பாப்பே!

Tamil nila / Dec 18th 2022, 8:16 pm
image

Advertisement

மெஸ்ஸியின் கோபத்தை தூண்டும் வகையில், கைலியன் எம்பாப்பே அவரது ஆஸ்தான குருவான கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றி பெருமையாக பேசியதாக கூறப்படுகிறது.


உலகில் உள்ள ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்கள் காணும் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி, PSG கிளப்பில் ஒன்றாக விளையாடும் இரண்டு பெரிய கால்பந்து வீரர்களுக்கு இடையே மோதலைக் காணவுள்ளது.


Paris Saint-Germain கால்பந்து கிளப்பில் ஒன்றாக விளையாடும் லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே இருவரும் தங்கள் சன் த் தேசத்தின் வெற்றிக்காக விளையாடுகின்றனர்.



லியோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டியாகும். ஆனால் பிரெஞ்சு வீரர் கைலியன் எம்பாப்பேவுக்கு இன்னும் உலகக் கோப்பைகள் உள்ளன.


கைலியன் எம்பாப்பே, இம்முறை உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றால், அதொடர்ந்து இரண்டு முறை அவ்வாறு செய்த வீரர் என்ற பெருமையை சுமந்துசெல்வார்.



போர்ச்சுகல் அணியின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் இல்லை, அவரால் வெற்றி பெறவும் முடியாது. அவருக்கும் இது கடைசி உலக்கோப்பையாகும். ஆனால், மொராக்கோவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி வெளியேறியது.


இருப்பினும், கிறிஸ்டியானோ ரொனால்டோ பல அபிமானிகளைக் கொண்டுள்ளார், இதில் எதிர்பாராத விதத்தில் கைலியன் எம்பாப்பேவும் அதில் ஒருவர்.


தற்சமயம் Bundesliga-வில் உள்ள RB Leipzig-ன் முன்னாள் PSG டிபெண்டெர் Abdou Diallo, பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அர்ஜென்டினா மற்றும் போர்த்துகீசியர்களுக்கு இடையேயான விவாதம் குறித்த Mbappeயின் எண்ணங்களைப் பற்றிப் பேசும்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார்.


"உண்மையில் கைலியன் எம்பாப்பேவுக்கு எல்லாமே கிறிஸ்டியானோ ரொனால்டோ தான்" என்று Diallo கூறினார்.



"லியோனல் மெஸ்ஸி வெர்சஸ் கிறிஸ்டியானோ என்று நீங்கள் குறிப்பிட்டால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது உங்களுடன் எம்பாப்பே விவாதம் செய்வார். அவரைப் பொறுத்தவரை, கிறிஸ்டியானோ என்பவர், யாராலும் தொடமுடியாத உச்சத்தில் இருப்பவர்" என்று கூறினார்.




Mbappe கிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறுவயதில் அவரது அறையில் சில படங்களை வைத்து கிட்டத்தட்ட தெய்வமாக பார்த்து வளர்ந்தார் என்பது பலருக்கு தெரிந்த உண்மை.



அவர் PSG அணியில் மெஸ்ஸியுடன் ஆடுகளத்தில் நன்றாகப் பழகுவார், ஆனால் அவர்கள் சிறந்த நண்பர்களாகத் தெரியவில்லை.


கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட செய்யாத ஒன்றை கைலியன் எம்பாப்பே செய்வாரா?

பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பையை வெறும் 23 வயதில் வென்று கொடுத்தவர் கைலியன் எம்பாப்பே.


இன்று அவர் மெஸ்ஸியை வென்றால், அவரது குரு கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட செய்யாத ஒன்றை அவர் செய்தார் என்ற பெருமையை பெறுவார், அதுமட்டுமின்றி, கைலியன் எம்பாப்பே இதில் சாதித்தால் தனது நிலையை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். 


ரொனால்டோவை தொடக்கூட முடியாது மெஸ்ஸியின் கோபத்தை தூண்டிய கைலியன் எம்பாப்பே மெஸ்ஸியின் கோபத்தை தூண்டும் வகையில், கைலியன் எம்பாப்பே அவரது ஆஸ்தான குருவான கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றி பெருமையாக பேசியதாக கூறப்படுகிறது.உலகில் உள்ள ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்கள் காணும் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி, PSG கிளப்பில் ஒன்றாக விளையாடும் இரண்டு பெரிய கால்பந்து வீரர்களுக்கு இடையே மோதலைக் காணவுள்ளது.Paris Saint-Germain கால்பந்து கிளப்பில் ஒன்றாக விளையாடும் லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே இருவரும் தங்கள் சன் த் தேசத்தின் வெற்றிக்காக விளையாடுகின்றனர்.லியோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டியாகும். ஆனால் பிரெஞ்சு வீரர் கைலியன் எம்பாப்பேவுக்கு இன்னும் உலகக் கோப்பைகள் உள்ளன.கைலியன் எம்பாப்பே, இம்முறை உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றால், அதொடர்ந்து இரண்டு முறை அவ்வாறு செய்த வீரர் என்ற பெருமையை சுமந்துசெல்வார்.போர்ச்சுகல் அணியின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் இல்லை, அவரால் வெற்றி பெறவும் முடியாது. அவருக்கும் இது கடைசி உலக்கோப்பையாகும். ஆனால், மொராக்கோவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி வெளியேறியது.இருப்பினும், கிறிஸ்டியானோ ரொனால்டோ பல அபிமானிகளைக் கொண்டுள்ளார், இதில் எதிர்பாராத விதத்தில் கைலியன் எம்பாப்பேவும் அதில் ஒருவர்.தற்சமயம் Bundesliga-வில் உள்ள RB Leipzig-ன் முன்னாள் PSG டிபெண்டெர் Abdou Diallo, பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அர்ஜென்டினா மற்றும் போர்த்துகீசியர்களுக்கு இடையேயான விவாதம் குறித்த Mbappeயின் எண்ணங்களைப் பற்றிப் பேசும்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார்."உண்மையில் கைலியன் எம்பாப்பேவுக்கு எல்லாமே கிறிஸ்டியானோ ரொனால்டோ தான்" என்று Diallo கூறினார்."லியோனல் மெஸ்ஸி வெர்சஸ் கிறிஸ்டியானோ என்று நீங்கள் குறிப்பிட்டால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது உங்களுடன் எம்பாப்பே விவாதம் செய்வார். அவரைப் பொறுத்தவரை, கிறிஸ்டியானோ என்பவர், யாராலும் தொடமுடியாத உச்சத்தில் இருப்பவர்" என்று கூறினார்.Mbappe கிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறுவயதில் அவரது அறையில் சில படங்களை வைத்து கிட்டத்தட்ட தெய்வமாக பார்த்து வளர்ந்தார் என்பது பலருக்கு தெரிந்த உண்மை.அவர் PSG அணியில் மெஸ்ஸியுடன் ஆடுகளத்தில் நன்றாகப் பழகுவார், ஆனால் அவர்கள் சிறந்த நண்பர்களாகத் தெரியவில்லை.கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட செய்யாத ஒன்றை கைலியன் எம்பாப்பே செய்வாராபிரான்ஸ் அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பையை வெறும் 23 வயதில் வென்று கொடுத்தவர் கைலியன் எம்பாப்பே.இன்று அவர் மெஸ்ஸியை வென்றால், அவரது குரு கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட செய்யாத ஒன்றை அவர் செய்தார் என்ற பெருமையை பெறுவார், அதுமட்டுமின்றி, கைலியன் எம்பாப்பே இதில் சாதித்தால் தனது நிலையை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். 

Advertisement

Advertisement

Advertisement