• Nov 19 2024

திருடன் என்ற பெயருடனேயே வாழ வேண்டிய நிலை..! பெரும் கவலையில் மகிந்த ராஜபக்ச

Chithra / Nov 10th 2024, 7:22 am
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தை கூட தான் பெற்றுக்கொள்ளவில்லை என தன்னிடம் தெரிவித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 

1970 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக உழைத்த போதிலும் இன்று நாட்டு மக்களிடம் இருந்து திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விரைவாக அதனை நீக்குவோம் என்று கூறிய போது, ​​தான் அவ்வளவு காலம் வாழ்வேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசியல் அதிகாரம் பெறுவதற்காக, எந்தத் தவறும் செய்யாத ஒரு மனிதனின் பண்பைக் கொன்று பிணங்களை குவிப்பதை விட பாவம் வேறொன்றுமில்லை என குறிப்பிட்டார். 


திருடன் என்ற பெயருடனேயே வாழ வேண்டிய நிலை. பெரும் கவலையில் மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தை கூட தான் பெற்றுக்கொள்ளவில்லை என தன்னிடம் தெரிவித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 1970 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக உழைத்த போதிலும் இன்று நாட்டு மக்களிடம் இருந்து திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விரைவாக அதனை நீக்குவோம் என்று கூறிய போது, ​​தான் அவ்வளவு காலம் வாழ்வேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.அரசியல் அதிகாரம் பெறுவதற்காக, எந்தத் தவறும் செய்யாத ஒரு மனிதனின் பண்பைக் கொன்று பிணங்களை குவிப்பதை விட பாவம் வேறொன்றுமில்லை என குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement