• Jan 16 2025

யாழில் மயங்கி வீழ்ந்து இளம் குடும்பஸ்தர் சாவு

Chithra / Jan 1st 2025, 11:07 am
image


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்குக்  கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் கல்வியில் நிலையத்துக்கு மகளை ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றவர் திடீரென ஓடி வந்து மயங்கி வீழ்ந்துள்ளார். 

இதனையடுத்து அவர் உடனடியாக யாழ். போதனா  வைத்தியாசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

யாழில் மயங்கி வீழ்ந்து இளம் குடும்பஸ்தர் சாவு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்குக்  கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.அதே இடத்தைச் சேர்ந்த கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் கல்வியில் நிலையத்துக்கு மகளை ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றவர் திடீரென ஓடி வந்து மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக யாழ். போதனா  வைத்தியாசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளார்.இந்த மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement