• May 02 2025

தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

Tamil nila / Jul 16th 2024, 10:31 pm
image

சிலாபம் - தெதுரு ஓயா நீர் நிலையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் , மவுன்டன் வத்த பகுதியைச் சேர்ந்த கருணாநிதி கோபிநாத் (வயது 20) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் ஹட்டன் - மவுன்டன் வத்தை பகுதியில் இருந்து சிலாபம் பகுதியில் உள்ள எண்ணை ஆலையொன்றில் பணியாற்றி வந்தவர் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன், உயிரிழந்த இளைஞன் சிலாபம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் முடித்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சிலாபம் தெதுரு ஓயா நீர்நிலைக்கு சென்று நீராடிய போதே குறித்த இளைஞன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு சிலாபம் - தெதுரு ஓயா நீர் நிலையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் , மவுன்டன் வத்த பகுதியைச் சேர்ந்த கருணாநிதி கோபிநாத் (வயது 20) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளைஞன் ஹட்டன் - மவுன்டன் வத்தை பகுதியில் இருந்து சிலாபம் பகுதியில் உள்ள எண்ணை ஆலையொன்றில் பணியாற்றி வந்தவர் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.அத்துடன், உயிரிழந்த இளைஞன் சிலாபம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் முடித்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்நிலையில், தனது மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சிலாபம் தெதுரு ஓயா நீர்நிலைக்கு சென்று நீராடிய போதே குறித்த இளைஞன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now