• May 01 2025

விபத்தில் துண்டாடப்பட்ட இளைஞனின் கால் பாதம் - யாழில் கோரம்

Chithra / Sep 10th 2024, 3:25 pm
image


யாழ்ப்பாணத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற  விபத்தில் இளைஞன்  ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது. 

விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், 

துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர். 

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


விபத்தில் துண்டாடப்பட்ட இளைஞனின் கால் பாதம் - யாழில் கோரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற  விபத்தில் இளைஞன்  ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now