• Nov 13 2025

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பேருந்து; இளம் தாய் பலி

Chithra / Nov 12th 2025, 7:13 pm
image


கம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிழந்துள்ளார்.

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, சரமட விகாரைக்கு அருகில் நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்தப் பேருந்து முதலில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டியுடன் பலமாக மோதி, அதனைத் தொடர்ந்து ஒரு வீடொன்றின் மதில் மீது மோதி, இறுதியாக கடைக்குள் புகுந்துள்ளது. 

இதன்போது கடையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான 35 வயதுடைய தக்ஷிலா ரத்நாயக்க என்பவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும், உயிரிழந்த தாயின் ஆறு வயது மகளும் மேலதிக சிகிச்சைக்காகப் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்ஸின் சாரதியை பேராதனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளைப்  பேராதனை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  


வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பேருந்து; இளம் தாய் பலி கம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிழந்துள்ளார்.கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, சரமட விகாரைக்கு அருகில் நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்தப் பேருந்து முதலில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டியுடன் பலமாக மோதி, அதனைத் தொடர்ந்து ஒரு வீடொன்றின் மதில் மீது மோதி, இறுதியாக கடைக்குள் புகுந்துள்ளது. இதன்போது கடையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான 35 வயதுடைய தக்ஷிலா ரத்நாயக்க என்பவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும், உயிரிழந்த தாயின் ஆறு வயது மகளும் மேலதிக சிகிச்சைக்காகப் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்ஸின் சாரதியை பேராதனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப்  பேராதனை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement