இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நாற்பது வயதுக்கு குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்த குப்பைகள் வெளியேறியுள்ள நிலையில், தற்பொழுது கட்சியில் தூய்மையானவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக இந்திக்க அனுருத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாற்பது வயதுக்கும் குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும், இந்த தடவை அந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாமலை ஜனாதிபதியாக்க இளைஞர் யுவதிகள் காத்திருப்பு- மொட்டு எம்.பி சுட்டிக்காட்டு. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நாற்பது வயதுக்கு குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்த குப்பைகள் வெளியேறியுள்ள நிலையில், தற்பொழுது கட்சியில் தூய்மையானவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக இந்திக்க அனுருத்த சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாற்பது வயதுக்கும் குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும், இந்த தடவை அந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.