• Jul 15 2025

மேலாடையின்றி சுற்றித் திரிந்த தாய்லாந்து பெண்! அறுகம் குடாவில் நடக்கும் அசம்பாவிதங்கள்

Chithra / Jul 15th 2025, 9:32 am
image

அம்பாறை - அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் பொலிஸார் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நேற்று நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

தாய்லாந்து நாட்டை சேர்ந்த குறித்த பெண், ஒரு விருந்தகத்திலிருந்து மற்றொரு விருந்தகத்தின் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார். 

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவருடன், கடந்த 11 ஆம் திகதி நாட்டிற்கு வந்த குறித்த பெண்,

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் உள்ள விருந்தகத்தில் தங்கியிருக்க முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


மேலாடையின்றி சுற்றித் திரிந்த தாய்லாந்து பெண் அறுகம் குடாவில் நடக்கும் அசம்பாவிதங்கள் அம்பாறை - அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் பொலிஸார் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த குறித்த பெண், ஒரு விருந்தகத்திலிருந்து மற்றொரு விருந்தகத்தின் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவருடன், கடந்த 11 ஆம் திகதி நாட்டிற்கு வந்த குறித்த பெண்,எதிர்வரும் 20 ஆம் திகதிவரை அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் உள்ள விருந்தகத்தில் தங்கியிருக்க முன்பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement