• Sep 29 2024

அதிக வேகத்துடன் பயணித்து வாகனத்தை நிறுத்தாது சென்ற யுவதிகள் - பொலிஸாரிடமும் வாக்குவாதம் samugammedia

Chithra / Jul 10th 2023, 7:22 pm
image

Advertisement

டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்திய 19 வயதுடைய யுவதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் பயணித்த நிறுத்துமாறு காவல் துறையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் அதனை செலுத்திய யுவதி, காவல் துறையினரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது சென்றுள்ளார்.

பின்னர் காவல் துறையினர் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் சுற்றிவளைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி காவல் துறையினரிடம் சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தியவர் மற்றும் அவரோடு பயணித்த இருவர் ஆகிய மூவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் யுவதிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


அதிக வேகத்துடன் பயணித்து வாகனத்தை நிறுத்தாது சென்ற யுவதிகள் - பொலிஸாரிடமும் வாக்குவாதம் samugammedia டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்திய 19 வயதுடைய யுவதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் பயணித்த நிறுத்துமாறு காவல் துறையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.எனினும் அதனை செலுத்திய யுவதி, காவல் துறையினரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது சென்றுள்ளார்.பின்னர் காவல் துறையினர் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் சுற்றிவளைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி காவல் துறையினரிடம் சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.இதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தியவர் மற்றும் அவரோடு பயணித்த இருவர் ஆகிய மூவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அத்துடன் யுவதிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement