• May 13 2024

நீதிமன்றங்களில் சாட்சியம் வழங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jul 10th 2023, 7:46 pm
image

Advertisement

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை குறித்து அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாது. என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 40 துப்பாக்கி சூட்டு பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.பகல் வேளையில் பொது இடங்களில் இவ்வாறு துப்பாக்கி சூட்டு பிரயோகம் நடத்தப்படுகிறது.


நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களில் பெரும்பாலானோர் துப்பாக்கி பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாமல் உள்ள நிலையில் எவ்வாறு மக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கொண்டு சாட்சியம் வழங்குவார்கள்.

பொதுமக்களின் உயிருக்க உத்தரவாதம் இல்லாத நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாது.பதவி நிலையில் இருந்து ஓய்வுப்பெற்ற சி.டி.விக்கிரமரத்னவுக்கு பதவி காலம் நீடிக்கப்படுகிறதே தவிர புதிய பொலிஸ்மா  அதிபர் நியமிக்கப்படவில்லை.

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை தொடர்பில் அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

நீதிமன்றங்களில் சாட்சியம் வழங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை குறித்து அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாது. என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 40 துப்பாக்கி சூட்டு பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.பகல் வேளையில் பொது இடங்களில் இவ்வாறு துப்பாக்கி சூட்டு பிரயோகம் நடத்தப்படுகிறது.நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களில் பெரும்பாலானோர் துப்பாக்கி பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாமல் உள்ள நிலையில் எவ்வாறு மக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கொண்டு சாட்சியம் வழங்குவார்கள்.பொதுமக்களின் உயிருக்க உத்தரவாதம் இல்லாத நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாது.பதவி நிலையில் இருந்து ஓய்வுப்பெற்ற சி.டி.விக்கிரமரத்னவுக்கு பதவி காலம் நீடிக்கப்படுகிறதே தவிர புதிய பொலிஸ்மா  அதிபர் நியமிக்கப்படவில்லை.புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை தொடர்பில் அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement