இளைஞர் சங்கங்களை அரசியலுக்கு பயன்படுத்தும் நிலைமைகளை தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேர்ந்துள்ள சவால்கள் குறித்து இன்று விசேட உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன். இவை சமூக அபிவிருத்திக்காக இருக்க வேண்டும், அரசியலுக்காக அல்ல,' என அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகளை சந்தித்து, இளைஞர்களுக்கான சிக்கல்களுக்கு இருதரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் எனவும், அமைச்சருக்கு யோசனையொன்றையும் முன்வைத்தார்.
இளைஞர்களின் திறன் வளர்ச்சி மற்றும் சமூக சேவையை முன்னேற்றும் நோக்கில் இளைஞர் சங்கங்கள் இயங்க வேண்டும் என்பது அவரது வலியுறுத்தலாகும்.
இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர்.
இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன.
இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர்.
சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர்.
தற்போது தேசிய மாநாடு நடைபெறுகிறது. எனது தகவலின்படி, அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இது தொடர்ந்தால், இளைஞர் சமூக இயக்கம் குறையும்.
இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அதை மிகைப்படுத்தாமல். இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குங்கள். என குறிப்பிட்டுள்ளார்
இந்த நாட்டில் இளைஞர் சமூக இயக்கம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அந்தப் பணி செய்யப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறும்.
பின்னர் அரசியல் கட்சிகளும் இவற்றில் ஈடுபடலாம். அது நடந்தால், இந்த இளைஞர் சமூக இயக்கம் மறைந்துவிடும்.
இந்த இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த சிறு தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்தேன்.' என குறிப்பிட்டுள்ளார்
இளைஞர் சங்கங்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க இளைஞர் சங்கங்களை அரசியலுக்கு பயன்படுத்தும் நிலைமைகளை தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேர்ந்துள்ள சவால்கள் குறித்து இன்று விசேட உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.'இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன். இவை சமூக அபிவிருத்திக்காக இருக்க வேண்டும், அரசியலுக்காக அல்ல,' என அவர் தெரிவித்தார்.மேலும், முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகளை சந்தித்து, இளைஞர்களுக்கான சிக்கல்களுக்கு இருதரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் எனவும், அமைச்சருக்கு யோசனையொன்றையும் முன்வைத்தார்.இளைஞர்களின் திறன் வளர்ச்சி மற்றும் சமூக சேவையை முன்னேற்றும் நோக்கில் இளைஞர் சங்கங்கள் இயங்க வேண்டும் என்பது அவரது வலியுறுத்தலாகும்.இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர். இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன. இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர். சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர். தற்போது தேசிய மாநாடு நடைபெறுகிறது. எனது தகவலின்படி, அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்ந்தால், இளைஞர் சமூக இயக்கம் குறையும். இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அதை மிகைப்படுத்தாமல். இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குங்கள். என குறிப்பிட்டுள்ளார்இந்த நாட்டில் இளைஞர் சமூக இயக்கம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அந்தப் பணி செய்யப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறும். பின்னர் அரசியல் கட்சிகளும் இவற்றில் ஈடுபடலாம். அது நடந்தால், இந்த இளைஞர் சமூக இயக்கம் மறைந்துவிடும். இந்த இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த சிறு தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்தேன்.' என குறிப்பிட்டுள்ளார்