• Jan 11 2025

யாழில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் இளைஞன் மீது தாக்குதல்

Chithra / Jan 2nd 2025, 9:56 am
image


வருட இறுதி நாளான நேற்றுமுன்தினம் 31 ஆம் திகதி இரவு  யாழ். நகர்ப்பகுதியில் வன்முறை குழுவொன்று இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வருட இறுதிநாள் என்பதால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்வாறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வந்த கும்பல் ஒன்று அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.

அந்த கும்பலானது முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக ஓட்டியது. 

அதன்பின்னர் குறித்த கும்பல் இளைஞர் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள், கை, கால் என்பவற்றை பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஆனால் அதை தடுக்க எவரும் முன்வரவில்லை. 


இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.

இச் சம்பவம் குறித்து மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் திரு.தனபால ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

யாழில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் இளைஞன் மீது தாக்குதல் வருட இறுதி நாளான நேற்றுமுன்தினம் 31 ஆம் திகதி இரவு  யாழ். நகர்ப்பகுதியில் வன்முறை குழுவொன்று இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருட இறுதிநாள் என்பதால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்வாறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வந்த கும்பல் ஒன்று அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.அந்த கும்பலானது முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக ஓட்டியது. அதன்பின்னர் குறித்த கும்பல் இளைஞர் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள், கை, கால் என்பவற்றை பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஆனால் அதை தடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.இச் சம்பவம் குறித்து மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் திரு.தனபால ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement