திருகோணமலை பதில் மாவட்ட செயலாளராக எஸ்.சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலாளராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.
இந் நிலையில், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த இவர், புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படும் வரை பதில் பதில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம்(01) முதல் பதில் மாவட்ட செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 உத்தியோகத்தரான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராகவும் (காணி) மற்றும் கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது திருகோணமலை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும், இவர் பதில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை பதில் மாவட்ட செயலாளராக சுதாகரன் நியமனம். திருகோணமலை பதில் மாவட்ட செயலாளராக எஸ்.சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.திருகோணமலை மாவட்ட செயலாளராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.இந் நிலையில், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த இவர், புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படும் வரை பதில் பதில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்றையதினம்(01) முதல் பதில் மாவட்ட செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவை தரம் 1 உத்தியோகத்தரான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராகவும் (காணி) மற்றும் கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.தற்போது திருகோணமலை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும், இவர் பதில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.