• Apr 09 2025

மோதித்தள்ளிய நாடாளுமன்ற உறுப்பினர் நளினின் வாகனம் - இளைஞன் பரிதாப மரணம்

Chithra / Jun 12th 2024, 9:47 am
image

 

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்த 22 வயதுடைய இளைஞனே  நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதன்படி கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

அதன்படி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மோதித்தள்ளிய நாடாளுமன்ற உறுப்பினர் நளினின் வாகனம் - இளைஞன் பரிதாப மரணம்  நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்த 22 வயதுடைய இளைஞனே  நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அதன்படி கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.அதன்படி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now