கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.
இந்த மரணம் தற்கொலைதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கண்டி, குண்டசாலை பகுதியைச் சேர்ந்த யூடியூப் சனல் ஒன்றை நடத்திவரும் 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த இளைஞனின் பணப்பையில்,
"மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் எப்போதும் உங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று எழுதப்பட்ட ஒரு கடிதத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்
இந்த இளைஞன் 30ஆகடந்தம் திகதி இரவு ஹோட்டலுக்கு வந்து 31வது மாடியில் ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர் ஒருவர், ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதாக அளித்த புகாரைத் தொடர்ந்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த இளைஞனின் யூடியூப் சனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்- வெளியான தகவல்கள் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. இந்த மரணம் தற்கொலைதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கண்டி, குண்டசாலை பகுதியைச் சேர்ந்த யூடியூப் சனல் ஒன்றை நடத்திவரும் 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அந்த இளைஞனின் பணப்பையில், "மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் எப்போதும் உங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று எழுதப்பட்ட ஒரு கடிதத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்இந்த இளைஞன் 30ஆகடந்தம் திகதி இரவு ஹோட்டலுக்கு வந்து 31வது மாடியில் ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளார். ஹோட்டல் ஊழியர் ஒருவர், ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதாக அளித்த புகாரைத் தொடர்ந்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறந்த இளைஞனின் யூடியூப் சனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.