பிஹார் மாநிலம் சுபால் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுக்பால் மாவட்டத்தில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் புதிய பாலம் ஒன்று வெள்ளிக்கிழமை காலையில் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கவுசல் குமார் கூறுகையில், “நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், மரிச்சா அருகே உள்ள பகூர் மற்றும் பேஹ்ஜா பகுதியில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பிஹார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பாலம் ஒரு சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழுந்தது நினைவுகூரத்தக்கது.
இந்தியாவில் பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு- 9 பேர் காயம். பிஹார் மாநிலம் சுபால் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.சுக்பால் மாவட்டத்தில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் புதிய பாலம் ஒன்று வெள்ளிக்கிழமை காலையில் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கவுசல் குமார் கூறுகையில், “நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், மரிச்சா அருகே உள்ள பகூர் மற்றும் பேஹ்ஜா பகுதியில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.முன்னதாக, பிஹார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பாலம் ஒரு சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழுந்தது நினைவுகூரத்தக்கது.